சுடச்சுட

  

  ஆடி அமாவாசை: குழித்துறையில் தர்ப்பணம் செய்து முன்னோர் வழிபாடு

  By களியக்காவிளை,  |   Published on : 07th August 2013 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆடி அமாவாசையையொட்டி குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தர்ப்பணம் செய்து முன்னோர்கள் வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் முன்னோர்கள் நினைவாக ஆடி அமாவாசை நாளில் நீர்நிலைகளில் பலிகர்ம பூஜை மேற்கொள்வர். அதன்படி கன்னியாகுமரி மற்றும் குழித்துறையில் ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் பலிகர்ம பூஜை மேற்கொள்கிறார்கள்.

  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குழித்துறை வாவுபலி பொருள்காட்சி மைதானம் அருகே தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ஆயிரக்கணக்கானோர் பலிகர்மம் செய்தனர். இங்கு ஏராளமான வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் கூற அதன்படி  தர்ப்பணம் செய்யப்பட்டது. தொடர்ந்து அருகிலுள்ள குழித்துறை மகாதேவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ததுடன், முன்னோர் நினைவாக நடுவதற்காக அப்பகுதியிலிருந்து பல்வேறு வகையான மரக்கன்றுகளையும் வாங்கிச் சென்றனர்.

  குலசேகரம்: இப்பகுதியில் உள்ளவர்கள் திற்பரப்பு அருவி மற்றும் ஆற்றில் குளித்து பின்னர் பலி தர்ப்பணம் செய்தனர்.

  கூடல் கடவு: இதேபோல திற்பரப்பு அருகே கோதையாற்றுப் பகுதியான நந்திமங்கலம் கூடலில் திரளானானோர் பங்கேற்று பலி தர்ப்பணம் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai