சுடச்சுட

  

  கைதி தப்பிய விவகாரம்: இரு சிறப்பு எஸ்.ஐ.க்கள் இடைநீக்கம்

  By dn  |   Published on : 08th August 2013 11:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவட்டாறு காவல் நிலையத்திலிருந்து நாகர்கோவில் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட கைதி தப்பியோடிய சம்பவத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் இருவரை மாவட்ட எஸ்.பி. ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

  மேக்காமண்டபம் பிலாங்காலையைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகள் ஜெனிஷா (22). இவருக்கும், கோழிப்போர்விளையைச் சேர்ந்த ராஜகுமாருக்கும் (27) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.

   இந்நிலையில் ஜெனிஷா வெள்ளிக்கிழமை தக்கலையில் உள்ள ஒரு வழக்குரைஞர் அலுவலகத்துக்குச் சென்று விட்டு, பிலாங்காலைப் பகுதியில் தனது உறவினருடன் சென்றபோது அங்கு வந்த ராஜகுமார், ஜெனிஷாவை கத்தியால் குத்தினாராம்.

   இதில் பலத்த காயமடைந்த ஜெனிஷா மார்த்தாண்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருவட்டாறு போலீஸôர் வழக்குப் பதிந்து ராஜகுமாரை கைது செய்து தக்கலை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

  பின்னர் நீதிபதி உத்தரவின்பேரில் அவரை சிறையில் அடைப்பதற்காக,  நாகர்கோவில் சிறைக்கு போலீஸôர்  கொண்டு சென்றனர். அப்போது கொல்லன்விளை பகுதியில் ராஜகுமார் தப்பியோடினார். பின்னர் இரவில் இப்பகுதியிலுள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராஜகுமாரை போலீஸôர் மீட்டு, சிறையில் அடைத்தனர்.

  இடைநீக்கம்: இந்நிலையில் இச்சம்பவத்தில் ராஜகுமாரை சிறைக்கு கொண்டு சென்ற திருவட்டாறு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் நேசமணி, மனோகரன் ஆகியோர் பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai