சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் பல்வேறு சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் ஆய்வுப் பணிக்காக தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதன்கிழமை கன்னியாகுமரி வந்தார்.

     அவர் காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிப்படகில் சென்று பார்வையிட்டார்.

    அவருடன் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால், மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், நாஞ்சில் முருகேசன் எம்எல்ஏ, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அருண்ராய், தலைமை பொறியாளர் ஜெயராமன், கோட்ட பொறியாளர் சிதம்பரம், கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக மேலாளர் வின்சிலிராய் (பொறுப்பு), மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர் காரவிளை எம்.செல்வன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். பின்னர் அவர் குளச்சல் புறப்பட்டுச் சென்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai