சுடச்சுட

    

    கன்னியாகுமரி அருகே மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி இறந்தனர்.

    கன்னியாகுமரியை அடுத்த சமாதானபுரத்தைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (30). கட்டடத்  தொழிலாளி. இவரது மனைவி பிரீத்தி (26). இவர்களுக்கு பிரவீன் என்ற 11 மாதக்  குழந்தை உள்ளது. ஏசுதாஸ் தனது வீட்டில் அயர்ன்பாக்ஸ் மூலம் துணியை தேய்த்துக் கொண்டிருந்தார்.  அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது மனைவி பிரீத்தி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தென்தாமரைகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து  வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai