சுடச்சுட

  

  இளைஞர் காங்கிரஸ் 57-வது ஆண்டு தொடக்க விழா நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  நாகர்கோவில் பார்வதிபுரத்தில் நடைபெற்ற விழாவில் ராஜிவ் காந்தி சிலைக்கு இளைஞர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆஸ்கர் பிரடி தலைமை வகித்தார். நகராட்சி முன்னாள் தலைவர் அசோகன் சாலமன், மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர்கள் ராஜேஷ், காமராஜ், செல்வகுமார், ரவீந்திரன், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சிவபிரபு, ராகுல் காந்தி நற்பணி மன்ற மாவட்டத் தலைவர் மாகின், காங்கிரஸ் தலைமை நிலையச் செயலர் அந்தோனிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  தக்கலை:பத்மநாபபுரம் சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் சார்பாக அழகியமண்டபம் முதல் தக்கலை வரை நடைபயணம் நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சி.சாமுவேல் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய சங்க பொதுச்செயலர் டி.ராபர்ட்ராஜ், தக்கலை வட்டார விவசாய காங்கிரஸ் தலைவர் கே.ஜனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலர் டி.செல்வகுமார்  கொடியசைத்து நடை பயணத்தை தொடக்கி வைத்தார்.

  இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ்குமார், பொதுச்செயலர்கள் தம்பி விஜயகுமார், பி.ஜி.மத்தியாஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மேரி ஏஞ்சல் ரீத், இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பால் பொன்ராஜ், பொதுச்செயலர்கள் ஸ்டாலின், ஜெயசிங், முன்னாள் பொதுச்செயலர் தாஸ் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இப்பேரணி வைகுண்டபுரம், பரைக்கோடு, மணலி, மேட்டுக்கடை வழியாக தக்கலை வந்தடைந்தது.

  களியக்காவிளை:கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் நித்திரவிளை- கருங்கல் வரை  இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

  நித்திரவிளையில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி. ராஜேஷ் தலைமை வகித்தார்.

  இளைஞர் காங்கிரஸின் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி துணைத் தலைவர் லாரன்ஸ், கிள்ளியூர் தொகுதி துணைத் தலைவர் பிரேம்சிங், ஏழுதேசம் பேரூர் தலைவர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப் (கிள்ளியூர்), ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்), மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பிரடி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

  தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர் ராஜேஷ் இருசக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் கிள்ளியூர் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர்கள் ஜஸ்டின், ரெஜீஷ், காட்வின், ஜோஸ்லின் சுனில், எட்வின் ஜோஸ், டென்ஸ் குமார், குளச்சல் தொகுதி தலைவர் சுமன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai