சுடச்சுட

    

    டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு

    By நாகர்கோவில்  |   Published on : 10th August 2013 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :நாகர்கோவில் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள், ரொக்கப்பணம் வியாழக்கிழமை இரவு திருடப்பட்டது.

    ஈத்தாமொழி தெற்கு சூரங்குடியில் டாஸ்மாக் கடை உள்ளது. கடையின் கண்காணிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் வியாழக்கிழமை இரவு கடையை மூடிச் சென்றனர். வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது கடையின் முன் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது மதுபாட்டில்கள், பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஈத்தாமொழி  போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai