சுடச்சுட

  

  புள்ளியியல் மதிப்பீட்டாய்வு பயிற்சி முகாம் நிறைவு

  By கன்னியாகுமரி,  |   Published on : 10th August 2013 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  :தென்மாவட்ட புள்ளியியல் துறை அலுவலர்களுக்கான பயிர் மேம்பாட்டு திட்ட 2 நாள் பயிற்சி முகாம் கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

  பயிற்சி முகாமை மதுரை மண்டல புள்ளியியல் இணை இயக்குநர் கே.ரவிகுமார் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் புள்ளியியல் துறை உதவி இயக்குநர் எஸ்.ராஜகோபால் வரவேற்றார். திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் இ.சின்னமாரி பயிற்சி திட்டம் குறித்துப் பேசினார்.  சென்னை பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை உதவி இயக்குநர் பெருமாள், துணை இயக்குநர் ஜே.ஜான்ஜஸ்டின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  தேசிய மாதிரி ஆய்வு நிறுவன கண்காணிப்பாளர்கள் கணேசன், செல்வராஜ், புள்ளியியல் உதவி இயக்குநர் பெருமாள், இயக்குநர் ஜான்ஸ்டீபன், ஆய்வாளர் குமரன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.

  பயிற்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட புள்ளியியல் துறையினர் பங்கேற்றனர். முகாமில் உரிய காலத்தில் பயிர் சாகுபடி விவரங்களை கணக்கிடுதல், சிறுபான்மை பயிர்கள், பழங்கள் மற்றும் காய்கனி பயிர்களின் உற்பத்தியை கணக்கிடுவது தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டது.

  2-ம் நாள் முகாமில் கொட்டாரம் கிராமத்தில் களப்பணி பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட புள்ளியியல் துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai