Enable Javscript for better performance
மணல் கடத்தல்:ஓட்டுநர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திரு நெல்வேலி மாவட்டம்  சிவகிரி அருகே டிராக்டரில் மணல் கடத்திய ஓட்டுநர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

     சிவகிரி காவல் உதவி ஆய்வாளர் முருகராஜ் மற்றும் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

     அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை பிடித்துச் சோதனையிட்டபோது,  கணையாற்றிலிருந்து மணல் அள்ளிவந்தது தெரியவந்தது.

     இதையடுத்து, டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதன் ஓட்டுநரான தளவாய்புரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அந்தோனி மகன் சுடலைக்கனியை (31)  போலீஸார் கைது செய்தனர்.

     டிராக்டர் உரிமையாளரான அதே ஊரைச் சேர்ந்த பாக்கியநாதன் மகன் சின்னப்பராஜாவைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai