சுடச்சுட

    

    :களியக்காவிளை அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த மரம் ஏறும் தொழிலாளி காயமடைந்தார்.

    களியக்காவிளை அருகேயுள்ள தெற்றிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ராஜு (45). மரம் ஏறும் தொழிலாளி. இவர், தனது வீட்டருகேயுள்ள பிரைட் என்பவருக்குச் சொந்தமான தென்னை மரத்திலிருந்து தேங்காய் பறிப்பதற்காக சனிக்கிழமை மரத்தில் ஏறினாராம். அப்போது மரத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.

    இவரை அப்பகுதியினர் மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai