சுடச்சுட

    

    நாகர்கோவிலில் பெண்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    By நாகர்கோவில்  |   Published on : 14th August 2013 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

      ஹிரோஷிமா, நாகசாகி பேரழிவு நினைவு தினத்தையொட்டி நாகர்கோவிலில் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எல்.சி. ஜேக்கப் தலைமை வகித்தார். ஸ்டெல்லா ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார்.

    நிர்வாகிகள் சகுந்தலா, ஜெசிந்தா, ஆக்னஸ் குளோரி, தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

    கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரியும், ஆறு, குளங்களை ஆழப்படுத்தி அதில் கூடுதல் தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai