சுடச்சுட

  

  வரதட்சிணை கொடுமை வழக்கு: கணவருக்கு 2 ஆண்டுகள் சிறை

  By நாகர்கோவில்  |   Published on : 14th August 2013 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கன்னியாசிணை கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது கணவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

  ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்தவர் ஆரோக்கிய சகாயராஜ் (44). இவருக்கும், கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்த மேரி மேக்லினுக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாம்.

  திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் ரூ. 2.50 லட்சம் ரொக்கம், 60 பவுன் நகை, ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டதாம். திருமணத்திற்கு பின்பு, மேலும் வரதட்சிணைக் கேட்டு ஆரோக்கிய சகாயராஜ், மேரி மேக்லினை  கொடுமைப்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

  கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிந்து ஆரோக்கிய சகாயராஜ் கைது செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் 1-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

  வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், குற்றஞ்சாட்டப்பட்ட ஆரோக்கிய சகாயராஜுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai