சுடச்சுட

    

    நர்சிங் ஆசிரியை மீது துப்பாக்கிச் சூடு: மருத்துவரை இடை நீக்கம் செய்ய வலியுறுத்தல்

    By நாகர்கோவில்,  |   Published on : 15th August 2013 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தக்கலை அருகே நர்சிங் ஆசிரியை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அரசு மருத்துவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மண்டைக்காடு காரியாவிளையைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் அனின் ராஜா. இவரது மனைவி சுஜி. இவர் பள்ளியாடி குழிக்கோட்டில் அரசு மருத்துவர் ஸ்டாலின்ஜோஸ் நடத்தி வந்த நர்சிங் கல்லூரியில் வேலை பார்த்தார். கடந்த 8 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் சுஜியை, ஸ்டாலின் ஜோஸ் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.இதுதொடர்பாக தக்கலை போலீஸார் வழக்குப்பதிந்து ஸ்டாலின் ஜோûஸ தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம், அனின்ராஜா புதன்கிழமை அளித்த மனு விவரம்: கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட ஸ்டாலின் ஜோûஸ கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை பணியிடை நீக்கம் செய்து, அவர் நடத்தி வரும் கிளீனிக்கை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai