சுடச்சுட

  

  உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

  By குலசேகரம்,  |   Published on : 17th August 2013 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது என்றார் இந்திய தொழில்நுட்பக் கல்விச் சங்கச் செயலர் எஸ்.பேசில் ஞானப்பா.

  கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் இந்திய தொழில்நுட்பக் கல்விச் சங்கப் பிரிவுத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், எஸ். பேசில் ஞானப்பா பேசியதாவது:

  இந்திய தொழில்நுட்பக் கல்விச் சங்கம் 91 ஆயிரம் ஆசிரிய உறுப்பினர்களையும், 4 லட்சத்து 77 ஆயிரத்து 699 மாணவ உறுப்பினர்களையும் கொண்ட மிகப்பெரிய அமைப்

  பாகும்.

  பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன்மிகு ஆசிரியர்களை உருவாக்குவதும், தொழில் துறை மற்றும் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதி வாய்ந்த வல்லுநர்களை உருவாக்குவதும் இந்திய தொழில்நுட்பக் கல்விச் சங்கத்தின் நோக்கமாகும்.

  இதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு குறுகிய கால பயிற்சிகள், தலைமைப் பண்புகளை வளர்க்கும் வகையில் பயிலரங்கம் ஆகியவை நடத்தப்படுகின்றன. நிகழாண்டில் தேசிய, மண்டல மற்றும் பிரிவு அளவில் ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

  இப்போது உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. 1950-ம் ஆண்டில் 3 லட்சத்து 97 ஆயிரமாக இருந்த உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, இப்போது  70 லட்சத்து 49 ஆயிரமாக அதிகரித்

  துள்ளது.

  கல்வி கற்றவர்கள் சமூக கொடுமைகள், பெண்கள் மீதான வன்முறை, குழந்தை திருமணம், போதைப் பொருள் பழக்கம் ஆகியவற்றிற்கு எதிராக செயல்பட வேண்டும்.

  நம் நாட்டில் 16 முதல் 35 வயதுக்குள்பட்டவர்களில் 70 முதல் 73 சதம் வரை போதைப்பொருள் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும் என்றார்.

  விழாவுக்கு, கல்லூரி முதல்வர் ஒய். சுஜர் தலைமை தாங்கினார். கல்லூரித் தலைவர் ஜி. ரசல்ராஜ் குத்துவிளக்கேற்றினார். கல்லூரி துணை முதல்வர் வி. சுந்தர்ராஜ் வாழ்த்திப் பேசினார். மேலாண்மை துறைத் தலைவர் ஸ்டாலின் மனோ வரவேற்றார். ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் குமாரி தீபிகா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai