சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் பல்கலை.: தன்னார்வக் குழு கோரிக்கை

    By தக்கலை,  |   Published on : 19th August 2013 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குமரி மாவட்ட தன்னார்வக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

    மாவட்ட தன்னார்வக் குழுவின் 4-வது கூட்டம் சுங்கான்கடை தூய சவேரியார் செவிலியர் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தலைமை வகித்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் எ. பிரான்சிஸ் ஜூலியன் பேசியதாவது: தமிழகத்தில் மத்திய அரசின் கீழ் 2-ம், மாநில அரசின் கீழ் செயல்படும் 19 பல்கலைக்கழகங்களும் உள்ளன. நமது நாட்டில் பெரும்பாலும் பல்கலைக்கழகங்கள் நகரங்களில்தான் உள்ளன. ஆனால் பின்தங்கிய கிராமங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. இந்நிலை மாற வேண்டும். அப்போதுதான் ஆராய்ச்சியுடன் கூடிய உயர்கல்வி அனைத்து மாவட்டங்களுக்கும் கிடைக்கும். கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மத்திய அல்லது மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள் தேவை.

    பல்கலைக்கழகங்கள் அமையத் தேவையான மண்வளம், இயற்கை வளம், காட்டுவளம், காற்று வளம், புராதன மலைகளும் இங்கு உள்ளன.

    எனவே, இம் மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சோபனராஜ், குழு அமைப்பாளர் சுங்கான்கடை தூய சவேரியார் செவிலியர் கல்லூரித் தாளாளர் அருள்பணி டோமினிக் கடாட்சதாஸ் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai