சுடச்சுட

  

  செந்தறையில் நாளை சவேரியார் ஆலயம் தனிப் பங்காக திருநிலைப்படுத்தும் விழா

  By கருங்கல்  |   Published on : 19th August 2013 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கருங்கல் அருகே செந்தறையில் தூய சவேரியார் ஆலயம் தனிப் பங்காக திருநிலைப்படுத்தும் விழா செவ்வாய்க்கிழமை (ஆக. 20) நடைபெறுகிறது.

  பூட்டேற்றி பங்கின் கிளைப் பங்காகச் செயல்பட்ட இப் பங்கு இப்போது தனிப் பங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றுகிறார். வட்டார முதல்வர் அருள்பணி பீட்டர், அருள்பணி டென்சிங் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். முதல் அருள்பணியாளர் ஒய்சிலின் சேவியர், முன்னாள் பங்கு அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், பூட்டேற்றி, பாலூர், தெருவுக்கடை பங்கு மக்கள், பிற சபையினர் உள்பட திரளானோர் பங்கேற்கின்றனர்.

  ஏற்பாடுகளை பங்குப்பேரவை துணைத் தலைவர் ஆசிரியர் ரவி, செயலர் செரின்மேரி, பொருளாளர் ஜான்ஜேக்கப் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள், விழாக் குழுவினர் செய்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai