சுடச்சுட

    

    களியக்காவிளை அருகே கேரளத்துக்கு மணல் கடத்திச் செல்லவிருந்த மினி லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். மினி லாரிக்கு பாதுகாப்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

     களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீஸார் களியக்காவிளை அருகே தெற்றியோடு பகுதியில் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்த சைகை காட்டினர். ஓட்டுநர் மினி லாரியை போலீஸார் மீது மோதுவதுபோல வந்து சிறிது தொலைவில் நிறுத்திவிட்டுத் தப்பியோடினார். இதைத் தொடர்ந்து மினி லாரியை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது அதில் மணல் பதுக்கிவைத்து அதன்மேல் பாறைக் கற்களை போட்டு மணலை மறைத்திருந்ததும், மணலை கேரளத்துக்கு கடத்திச் செல்லவிருந்ததும் தெரிந்தது.

    மணலுடன் மினி லாரியை பறிமுதல் செய்த போலீஸார், மினி லாரிக்கு பாதுகாப்புக்காக மோட்டார் சைக்கிளில் வந்த குளப்புறம் கல்லறக்கல்விளைவீடு பகுதியைச் சேர்ந்த டேவிட் மகன் ஷாஜி (26) என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய மினி லாரி ஓட்டுநர், கிளீனரை போலீஸார் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai