சுடச்சுட

  

  குருந்தன்கோடு ஊராட்சியில் வெள்ளாடு பராமரிப்பு மற்றும் மேலாண்மை விளக்கவுரை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் நிகழாண்டில் 120 பேருக்கும், வெள்ளாடு பெருக்கும் திட்டத்தில் 9 பேருக்கும் தலா 10 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டன.

  வெள்ளாடு வளர்ப்பு மற்றும் நவீன கால்நடைப் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வுக் கருத்துகள் எடுத்துரைத்து அதற்குரிய கையேடுகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.

  கிடா மற்றும் பெட்டை வெள்ளாடுகளைத் தேர்வு செய்யும் முறை, மேய்ச்சலுடன் கூடுதல் தீவனம் இடும் முறை, பசுந்தீவனம், அடர் தீவன முறைகள் குறித்த தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டன.

  வெள்ளாடு வளர்ப்பில் உருண்டைப்புழு, நாடாப்புழு, தட்டைப்புழு தாக்குதலால் பொருளாதார சேதம் ஏற்படும். எனவே, குடற்புழு நீக்கத்தை கால அட்டவணைப்படி மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.

  முகாமில், குருந்தன்கோடு கால்நடை உதவி மருத்துவர் ரா. முருகேசன் பயனாளிகளுக்கு விளக்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai