சுடச்சுட

  

  அரசுத் துறை அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை பயிற்சி

  By dn  |   Published on : 21st August 2013 12:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கன்னியாகுமரி அரசுத் துறை உயர் அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை குறித்த இரண்டு நாள் முன்னோடிப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

  நாகர்கோவில் அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமை, மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தொடக்கி வைத்து பேசியது:

  அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் பணியாற்றி வருகிறது. அரசு அறிவித்து செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களை ஒவ்வொரு துறை வாரியாக முழுமையாக நிறைவேற்றுவதில் அரசு அலுவலர்களின் பங்கு முக்கியம்.

  துறைகளின் உயர் அலுவலர்கள் முதல் கடைநிலை அலுவலர்கள் வரை அனைவரும் இணைந்து பணியாற்றும்போது அரசின் திட்டங்களை மக்களிடம் முழுமையாகக் கொண்டு சேர்க்க முடியும்.

  அத்தகைய பணிகளைச் செய்வதில் சுணக்கம் காட்டும் அலுவலர்கள் மீது நாம் அறிவுரை கூறி சில ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை ஒழுங்குப்படுத்துவது அரசு அலுவலர்களின் கடமை.

  ஆகஸ்ட் 21 முதல் 23-ம் தேதி வரை மூன்று நாள்களுக்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் உள்ள கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களுக்கு அலுவலக நடைமுறைகள் குறித்து குறுகிய கால பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.

  அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த கோப்புகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால், அதிலுள்ள நடைமுறை விவரங்கள் குறித்தும் இப் பயிற்சியாளர்களிடம் கேட்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.

  முகாமில் சென்னை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் அரசு கூடுதல் செயலர் மற்றும் ஆய்வு அலுவலர் டி.என். சேகர், ஆய்வுக்குழு அலுவலர்  தியாகராஜன் ஆகியோர் ஒழுங்கு நடவடிக்கை குறித்த முன்னோடிப் பயிற்சி அளித்தனர். இதில் 30 அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai