சுடச்சுட

  

  சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப் பதியில் 23-ல் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

  By dn  |   Published on : 21st August 2013 12:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா, இம் மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாள்கள் நடைபெறுகிறது.

  இம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைகுண்டசாமி தலைமைப்பதி சாமிதோப்பில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் தை, வைகாசி, ஆவணி ஆகிய மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.23)  காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியைச் சுற்றி பவனி வருதல் நடைபெறும்.

  2-ம் நாள் அய்யா பரங்கி நாற்காலி வாகனத்திலும், 3-ம் நாள் அன்ன வாகனத்திலும், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்திலும், 5-ம் நாள் சப்பர வாகனத்திலும், 6-ம் நாள் கற்பக வாகனத்திலும், 7-ம் நாள் கருட வாகனத்திலும் தெருவீதி வலம் வருதல் நடைபெறும். 8-ம் நாள் விழாவான ஆகஸ்ட் 30-ம் தேதி அய்யா வெள்ளைக் குதிரை வாகனத்தில் முத்திரி கிணறு அருகே கலிவேட்டையாடி சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு 12 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சியும் தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறும்.

  தேரோட்டம்: 9-ம் நாள் அய்யா அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வருதல் நடைபெறும். 11-ம் நாளான செப்டம்பர் 2-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு அய்யா ரிஷப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். திருவிழா நாள்களில் தினமும் அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai