சுடச்சுட

  

  கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு வேல்முருகன் சேவா சங்க பக்தர்கள் செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தனர்.
   இதையொட்டி, ஜீப்பின் முன்பகுதியில் மாலை அணிவிக்கப்பட்ட அருள்மிகு குமாரசுவாமியின் வண்ண முழு திருஉருவப் படம் வைத்து பக்தர்கள் குமாரகோவில் சன்னதியின் முன்பு கிரிவலம் செல்வதற்காகக் கூடினர். பின்னர் முருகனின் திருஉருவப் படத்திற்கு பூஜை செய்து முருகனின் திருநாமத்தை கூறியவாறு, கோவில் மலையை சுற்றி வலம் வந்தனர்.
   கிரிவலத்தின்போது சன்னதி முன்பகுதியிலுள்ள கணபதி, சுடலைமாடன், கோம்பைசாமி, பத்ரகாளியம்மனை வழிபட்டு, நிறைவாக தேரடி கோவில் வழியாக தெப்பக்குளத்திலுள்ள கணபதியையும் வணங்கிவிட்டு கோவிலை அடைந்தனர்.
   இதன்பின்பு அருள்மிகு குமாரசுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கிரிவலத்தில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதத்துடன் முருகனின் வண்ண திருஉருவப்படம் வழங்கப்பட்டது.
   கிரிவலத்திற்கு முன்பாக பாஜக அறநிலைப்பிரிவு மாவட்டத் தலைவர் ராமசந்திரன் ஆன்மிக உரையாற்றினார். ஊர்வலத்தில் வேல்முருகன் சேவா சங்கத் தலைவர் டாக்டர் சுகுமாரன், கௌரவத் தலைவர் குமாரசுவாமி, விழாக் குழுத் தலைவர் சதாசிவன், பொதுச் செயலர் அஜிகுமார், அமைப்பாளர் மணி, கோடியூர் சுப்பையா, அமைப்புச் செயலர் சுகுமாரன், சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், கங்காதரன், சதாசிவன், என்.கே.பாபு, ஜெயகுமார், கோபகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
   பௌர்ணமி பூஜை விழா: தோட்டியோடு ஸ்ரீ மௌன குருசுவாமி கோவிலில் பௌர்ணமி பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி காலையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், அபிஷேகம், பஜனை, சொற்பொழிவு, கோமாதா பூஜை, சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன. மாலையில் சிவப்புராணம் வாசித்தல், திருவிளக்கு வழிபாடு, சொற்பொழிவு, நாம ஜெபம்,தியானம் ஆகியவை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் பி. சுகதேவன் செய்திருந்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai