சுடச்சுட

  

  பூவங்காபறம்பு திருக்கோவிலில்பௌர்ணமி அன்னதான விழா

  By தக்கலை  |   Published on : 23rd August 2013 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பூவங்காபறம்பு ஸ்ரீ சாமூண்டீஸ்வரி அம்மன் திருக்கோவிலில் பௌர்ணமி அன்னதான விழா நடைபெற்றது.

   ஸ்ரீ சாமூண்டீஸ்வரி அமமன் திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு பொங்கல் வழிபாடு மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

  பின்னர் நடைபெற்ற பௌர்ணமி அன்னதான விழா நிகழ்ச்சிக்கு ஊர்த் தலைவர் ராமன்பிள்ளை தலைமை வகித்தார். செயலர்கள் ஐயப்பன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை

  வகித்தனர்.

   கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தீபம் ஏற்றி அன்னதான விழாவை தொடங்கி வைத்தார்.  வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா ஆசியுரை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் விஜயகுமார், சமூக சேவகர் அருள்கண்ணன் மற்றும் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai