சுடச்சுட

    

    தக்கலை அருகே கல்லூரி மாணவியிடம் 3 பவுன் தங்கச் சங்கலியைப் பறித்துச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

     தக்கலை அருகே கொல்லன்விளையைச் சேர்ந்தவர் கோலப்பன். இவரது மகள் ஜெகதீஸ்வரி. இவர் நாகர்கோவிலிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தினமும் அதிகாலையில் எழுந்து படிப்பது வழக்கமாம்.

    வியாழக்கிழமை அதிகாலை வீட்டுக்கு வெளியே வந்தாராம். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டாராம்.

     இது குறித்து ஜெகதீஸ்வரியின் தந்தை கோலப்பன் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.   

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai