சுடச்சுட

  

  தேசிய அளவிலான கராத்தே போட்டிகள்: குமரியில் இன்று தொடக்கம்

  By கன்னியாகுமரி  |   Published on : 24th August 2013 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய அளவிலான 12-வது ஆண், பெண் கராத்தே போட்டிகள் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.

   2 நாள்கள் நடைபெறும் இப் போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இது குறித்து அகில இந்திய கராத்தே சங்க துணைத் தலைவர் ஜே.எஸ்.கலைமணி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    ஆல் இந்தியா ரியுசின் கான் சிட்டோ ரியு கராத்தே சங்கம் சார்பில் போட்டி நடைபெறுகிறது. போட்டியில் மணிப்பூர், அசாம், தமிழ்நாடு, திரிபுரா, மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட 17 மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

   சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர், சிறுவர்கள் என 80 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். 5 முதல் 21 வயதுக்கு மேற்பட்டோர் வரை போட்டிகளில் பங்கேற்பார்கள். போட்டிகளை நடத்த 60 நடுவர்கள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர் என்றார் அவர்.

     தொடக்க நிகழ்ச்சிக்கு ஆல் இந்தியா ரியுசின் கான் சிட்டோ ரியு கராத்தே சங்கத் தமிழ்நாடு தலைவர் கே.பாபுராஜன் தலைமை வகிக்கிறார். போட்டி ஒருங்கிணைப்புக்குழுச் செயலர் கே.கே.எச்.ராஜ் வரவேற்கிறார். கன்னியாகுமரி டி.எஸ்.பி கே.பாலகிருஷ்ணன் போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.

   நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அ லுவலர் எல்.தீர்த்தோஸ், விவேகானந்த கேந்திர பொருளாளர் ஹனுமந்தராவ், போட்டி ஒருங்கிணைப்புக்குழு இயக்குநர் டி.ஜோஸ், கராத்தே தலைமைப் பயிற்சியாளர்கள் டி.இ.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.வெங்கடேஸ்வரராவ், வி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஒய்.நாகேஸ்வரராவ், டி.ஸ்ரீனிவாசன் மற்றும் வி.பூஜாரி, எஸ்.பொன்னம்பலம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai