சுடச்சுட

    

    புனித அகுஸ்தினார் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

    By குலசேகரம்  |   Published on : 24th August 2013 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

     விழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை 6.45  மணிக்கு அருள்பணி லூர்து ராஜ் புனித அகுஸ்தினார் உருவம் தாங்கிய கொடியை ஏற்றி வைத்தார்.

       இதில் ஆலய அருள்பணியாளர் சிலுவை எட்வின், உதவிப் பணியாளர் ஜார்ஜ் எட்வின்,  பங்குப் பேரவை துணைத் தலைவர் விஜயராஜன், செயலர் வில்லியம் பெர்னான்டஸ், பொருள் மெர்சி, வின்சென்ட் தே பவுல்  சங்கத் தலைவர் ஏ.ஜே.எம். ராஜா மற்றும் திரளான இறைமக்கள் பங்கேற்றனர்.

       பின்னர் அருள் பணி சில்வெஸ்டர் டி. குருஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியை உண்ணியூர்கோணம் லூர்துமாதா அன்பியம் மற்றும் சூரிய கோடு புனித அந்தோணியார் அன்பிய இறைமக்கள் சிறப்பித்தனர். இத்திருவிழா தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகின்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai