சுடச்சுட

  

  விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

  விநாயகர் சதுர்த்தி விழா செப்.9-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் டி.எஸ்.பி. உதயகுமார் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

  இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், ராஜேஷ், சங்கர்கண்ணன், ஜெயா பிரின்ஸ்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் டி.எஸ்.பி.உதயகுமார் பேசியதாவது: கடந்த ஆண்டு விநாயகர் சிலை பூஜைக்கு வைக்கப்பட்ட இடத்தில் மட்டுமே இந்த ஆண்டும் சிலைகள் வைக்க வேண்டும். பிரச்னைக்குரிய இடத்தில் சிலைகள் வைக்க அனுமதி கிடையாது. வீட்டு வளாகத்தில் வைக்கப்படும் சிலைகளுக்கு வீட்டு உரிமையாளர்களே பொறுப்பாகும். சிலைகளை பாதுகாக்க அவற்றின் அமைப்பாளர்களே 10 பேர் கொண்ட கமிட்டியை அமைக்க வேண்டும்.

  கமிட்டியில் இடம் பெறும் 10 பேரின் பெயர் விவரங்களை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் சிலைக்கு 5 பேர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழியில் மட்டுமே செல்ல வேண்டும். ஊர்வலத்தில் பிறர் மனம் புண்படும் வகையில் கோஷங்கள் எழுப்பக்கூடாது என்றார் அவர்.

  கூட்டத்தில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai