சுடச்சுட

  

  திருவட்டாறு ஒன்றியத்துக்கு சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தி ரதம் சனிக்கிழமை வந்தது.

  இந்நிகழ்ச்சியையொட்டி சனிக்கிழமை காலையில் ஆற்றூர் கல்லுப்பாலம் இசக்கியம்மன் கோவிலில், கோவில் தலைவர் வல்சலம் நாடார் தலைமையில் ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

  ராமகிருஷ்ணா ஆசிரமத்தைச் சேர்ந்த சிவபாலானந்த சுவாமி ஆசியுரை வழங்கினார்.

  பின்னர் ஆற்றூர் என்விகேஸ்டி பள்ளியில் மாணவர், மாணவியருக்கான புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

   இதில் என்விகேஸ்டி கல்வி சங்கத் தலைவர் எஸ்.ரகுகுமார் தலைமை வகித்தார். விவேகானந்தர் ஜயந்தி மாநிலப் பொறுப்பாளர் கிருஷ்ண ஜகநாதன் உரை நிகழ்த்தினார்.

  மாலை 4 மணிக்கு இருசக்கர வாகனப் பேரணியுடன் ஆற்றூர் சந்திப்பிலிருந்து ரதயாத்திரை தொடங்கி திருவட்டாறு சென்றது. இங்கு மருத்துவர் சந்திரமோகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

  குலசேகரத்தில் வரவேற்பு:இந்த ரதம் மாலை 5 மணிக்கு செருப்பாலூர் முத்தாரம்மன் கோவில் வந்தது.

   இங்கு கோவில் தலைவர் வி. நாராயணபிள்ளை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து திரளான மக்கள் பங்கேற்ற ரத யாத்திரை குலசேகரம் பகுதியில் நடைபெற்றது.

  ரதயாத்திரையை மருத்துவர் எஸ். குமாரசாமி தொடங்கி வைத்தார். பின்னர் குலசேகரம் அரசுமூடு சந்திப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு விடிஎம் கல்லூரி தலைவர் பி. நாரயணன் நாயர் தலைமை வகித்தார்.

  தேவர்கால கிருஷ்ணன்கோவில் தலைவர் என்.எஸ். ராமசந்திரன்,  பேரூராட்சித் தலைவர்கள் ராதா, புஷ்பரதி, பிரசன்னகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்ஆர்கேபிவி பள்ளி முதல்வர் சுதாதேவி குத்துவிளக்கேற்றினார்.

   விவேகானந்தர் ஜயந்தி திருவட்டாறு ஒன்றிய அமைப்பாளர் பொன். ராஜமணி வரவேற்றார். மாநிலப் பொறுப்பாளர் கிருஷ்ண ஜெகநாதன் சிறப்புரை நிகழ்த்தினார். ஒன்றியச் செயலர் கிருஷ்ணன்குட்டி நன்றி

  கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai