சுடச்சுட

  

  மத்திய ஹோமியோபதி கவுன்சில் நடத்தும் தென்மாநில ஹோமியோபதி கல்லூரி ஆசிரியர்களுக்கான இரு நாள் பயிலரங்கம் குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஆக 26) தொடங்குகிறது.

  இதுகுறித்து மத்திய ஹோமியோபதி கவுன்சில் உறுப்பினரும், குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் துணை மருத்துவ அதிகாரியுமான டாக்டர் என்.வி. சுகதன் கூறியதாவது:

  மத்திய ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில், தமிழ்நாடு, கேரளம் மற்றும் ஆந்திர மாநில ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஹோமியோபதி கல்வியியல் தொழில்நுட்பம் என்ற கருத்தில் பயிலரங்கம் ஆக. 26, 27 ஆகிய தேதிகளில்  குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் நடைபெறுகிறது.

  தமிழகத்தில் இப்பயிலரங்கம் நடப்பது இதுவே முதல்முறையாகும். இப்பயிலரங்கில்  தமிழ்நாடு, கேரளம் மற்றும் ஆந்திர பிரதேச ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஆசியர்கள் பங்கேற்கின்றனர்.

  இப்பயிலரங்கை மத்திய ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் ராம்ஜி தொடங்கி வைக்கிறார். குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சி.கே. மோகன் வரவேற்கிறார்.

    இதில் ஹோமியோபதி கவுன்சில் துணைத் தலைவர் அருண் பாஸ்மி, முதுநிலை கல்விக் குழுத்  தலைவர் எஸ்.பி. சிங், ஹோமியோபதி கவுன்சிலின் கல்விக் குழுத் தலைவர் எம்.கே. ஷகானி, செயற்குழு உறுப்பினர் ஜி. பி. ஹனிமன் மற்றும்  பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ கல்வியாளர்கள் டாக்டர் கிஷோர் மேத்தா, அரவிந்த் கோட்டே, மனிஷா ஷோலங்கி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai