சுடச்சுட

  

  974 பெண்களுக்கு திருமண நிதி, தாலிக்குத் தங்கம்

  By நாகர்கோவில்  |   Published on : 26th August 2013 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் சமூக  நலத்துறை சார்பில் 974 ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ. 3.71 கோடி காசோலையும், திருமாங்கல்யத்துக்கு 3,896 கிராம் தங்கத்தையும் அமைச்சர் கே.டி. பச்சைமால் வழங்கினார்.

  நாகர்கோவில் கலைவாணர் கலையரங்கத்தில் நடைபெற்ற

  விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தலைமை வகித்தார். நாஞ்சில் ஏ. முருகேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் கே.டி. பச்சைமால் பங்கேற்று ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்துக்கு 4 கிராம் தங்கத்தை வழங்கிப் பேசினார்.

   மேலும் பட்டம் பயின்ற 511 ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவியாக தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ.2.55 கோடிக்கான காசோலைகளையும், 10-ஆம் வகுப்பு வரை பயின்ற 463 ஏழைப்பெண்களின்  திருமணத்துக்கு நிதியுதவியாக தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1.15 கோடிக்கான காசோலைகளையும் அமைச்சர் வழங்கினார்.

  மாவட்ட சமூகநல அலுவலர் உமாபதி வரவேற்றார். மாவட்ட ஊராட்சித் தலைவர் சாரதாமணி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இனையத் தலைவர் ஜான்தங்கம், தமிழ்நாடு மாநில மீன்வளக் கூட்டுறவு இனையத் தலைவர் சேவியர் மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai