சுடச்சுட

    

    மாவட்ட கால்பந்து போட்டி: எப்.சி. அணிக்கு கோப்பை

    By நாகர்கோவில்,  |   Published on : 27th August 2013 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவிலில் நடைபெற்ற மாவட்ட பிம்போ கால்பந்துப் போட்டியில் எப்.சி. அணி சுழற்கோப்பையை வென்றது.

    பிம்போ கால்பந்துக் குழுவினரின் 3-வது மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போட்டிக்கு மாவட்ட கால்பந்துக் கழகத் தலைவர் டேவிட்சன் ஜோஸ்லின் தலைமை வகித்தார்.

    சிஎஸ்ஐ சபை போதகர் ஞானதாஸ் தொடக்கிவைத்தார். பத்மநாபபுரம் நகர்மன்ற முன்னாள் தலைவர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பொறியாளர்கள் ரோகித், கிறிஸ்டோபர், இர்வின், அசோகன், ஸ்ரீநிவாசன், தினேஷ் வில்சன், நரேந்திரகுமார், சேவியர் தாமஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    மாவட்டம் முழுவதிலுமிருந்து 13 அணிகள் கலந்துகொண்டன. இறுதிப் போட்டியில் மறவை எப்.சி. அணியும், செயின்ட் அனீஸ் அணியும் மோதின. இதில் பெனால்டிக் கிக் முறையில் மறவை எப்.சி. அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது.

    வெற்றிபெற்ற அணிக்கு கோப்பையை, பில்ட்ர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கன்னியாகுமரி மையத் தலைவர் எஸ். சிறில் கிறிஸ்துராஜ் வழங்கினார். துணைத் தலைவர் பாரத் வில்சன், செயலர் ஆல்பர்ட் ராஜகுமார், இணைச் செயலர் இருதயதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai