சுடச்சுட

    

    நாகர்கோவில் நகர இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு நகரத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். செயலர் மகாராஜன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஜீவா, நாகராஜன், ஐயப்பன், சக்திவேல், சோமு, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி நகர இந்து முன்னணி சார்பில் 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து கடலில் விசர்ஜனம் செய்வது என்றும் நடைபெறும் ஊர்வலத்தில் பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பதால் திரளாக தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும்.

    இந்து முன்னணி நகரச் செயலர் நம்பிராஜனை தாக்கியவர்கள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai