சுடச்சுட

  

  நாகர்கோவிலில் நாளை அதங்கோட்டாசான் நூல் வெளியீட்டு விழா

  By நாகர்கோவில்,  |   Published on : 31st August 2013 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகர்கோவிலில் அதங்கோட்டாசான் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (செப்.1) நடைபெறுகிறது.

  சாமிதோப்பு தமிழாலயம், நாகர்கோவில் முதற்சங்கு சார்பில், கஸ்தூரிபா மாதர் சங்க கட்டடத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் அதங்கோட்டாசான் நூல் வெளியீட்டு விழாவுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் தலைமை வகித்து நூலை வெளியிடுகிறார். முதற்சங்கு ஆசிரியர் சிவனி சதீஷ் நூலாசிரியரை அறிமுகம் செய்கிறார். முனைவர் மு. அல்பென்ஸ்நதானியேல், முனைவர் எஸ்.ஏ.ஆர். பரதராஜ், கொடிக்கால் சேக் அப்துல்லா, சிவந்தி ஆதித்தனார் கல்லூரித் தலைவர் என். காமராஜ், செயலர் சி. ராஜன் ஆகியோர் நூலைப் பெற்றுக் கொள்கின்றனர். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர். டேனியல் நூல் ஆய்வுரை நிகழ்த்துகிறார். கவிஞர் வில்லவன், மா. பென்னி, கு. சிதம்பரநடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். நிறைவாக நூல் ஆசிரியர் புலவர் வே. செல்லம் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai