சுடச்சுட

  

  குமரி மாவட்ட மீனவர் குறை தீர்  கூட்டம்  மாவட்ட வருவாய் அலுவலர் சு. பழனிசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  இக்கூட்டத்தில் 26.07.2013 அன்று  நடைபெற்ற மீனவர் குறை தீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அலுவலர்கள் பதிலளித்தனர். பின் கடல்சார் கல்வி பயிலும் மீனவ சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கும் உதவித்தொகையை மாவட்ட வருவாய் அலுவலர் சு. பழனிசாமி வழங்கினார்.

  இத்திட்டத்தின்கீழ்  கன்னியாகுமரி, கோவளம், ராஜாக்கமங்கலம்துறை மற்றும் குளச்சல் பகுதிகளைச் சேர்ந்த  மீனவ சமுதாயத்தைச் சார்ந்த 5 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.2.25 லட்சம் வழங்கப்பட்டது.

   கூட்டத்தில் மீன்துறை உதவி இயக்குநர்கள் ஐசக்ஜெயகுமார், ராபர்ட் ஜோதி, சேகர், சுப்பிரமணியன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் நசீர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai