சுடச்சுட

  

  பெண் கொலை எதிரொலி குலசேகரத்தில் வீடுகள் இடித்து தரைமட்டம்

  By குலசேகரம்,  |   Published on : 31st August 2013 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  : குலசேகரம் அருகே பெண் கொலை தொடர்பாக கைதானவரின் உறவினர் வீடுகளை அப் பகுதியினர் இடித்து தரைமட்ட மாக்கினர்.

   குலசேகரம் அருகே கல்வெட்டான் குழியைச் சேர்ந்தவர் நாகராஜன், கட்டடத் தொழிலாளியான இவரது மனைவி விஜயா (42). கடந்த புதன்கிழமை சிற்றாறு பட்டணம் கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார்.

   அப்போது இதே பகுதியைச் சேர்ந்த மின்னல் பகர்தீன் மகன் மணிகண்டன் (35),   விஜயாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம். அப்போது விஜயா, மணிகண்டனின் பிடியில் இருந்து தப்ப முயன்றுள்ளார்.

   இதில் தண்ணீரில் மூழ்கடிக்ககப்பட்டு விஜயா கொல்லப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  இச் சம்பவம் நடைபெற்ற நாளில் விஜயாவின் கணவர் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றிருந்தார். இந்நிலையில் அவர் வியாழக்கிழமை மாலையில் வீடு திரும்பினார்.

  வீடுகள் தரைமட்டம்: இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக ஆத்திரமுற்ற ஊர்மக்கள் மற்றும் பிற பகுதிகளிருந்த வந்தவர்கள் கால்வாய்க் கரையில் அடுத்தடுத்த இருந்த மணிகண்டனின் குடிசை வீடு மற்றும்  இவரது சகோதரர்கள் முருகன்,ராஜு மற்றும் சகோதரி கலா ஆகியோர் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர்.

    இதில் வீடுகளில் இருந்த கட்டில்,பீரோ, தொலைக்காட்சி, மடிக் கணினிகள்,  புத்தகங்கள், உணவுப் பொருள்கள், வீடு புதிய வீடு கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த மரங்கள் என ஏராளமான பொருள்கள் கால்வாயில் வீசப்பட்டன.

  இச் சம்பவம் நடைபெற்றபோது அந்த வீடுகளில் யாரும் இல்லை. அவர்கள்  தலைமறைவாகிவிட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai