காசோலை மோசடி வழக்கு விசாரணையில் ஆஜராகாத தாழக்குடி பேரூர் ஜெயலலிதா பேரவை செயலருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததையடுத்து போலீஸார் அவரை வியாழக்கிழமை கைது செய்தனர்.
தாழக்குடி பேரூர் ஜெயலலிதா பேரவைச் செயலராக இருப்பவர் சிதம்பரதாணு. இவர் மீது அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார் நாகர்கோவில் விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு சிதம்பரதாணு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தாராம். இதையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆரல்வாய்மொழி போலீஸார் சிதம்பரதாணுவை கைது செய்தனர்.