சுசீந்திரத்தில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டப் பகுதியை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
நாகர்கோவில்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை சமாளிக்க சுசீந்திரம் வராமல் ஆசிரமம் பகுதியில் இருந்து வழுக்கம்பாறை வரை புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு புறவழிச்சாலை அமைக்கும்போது, பழையாற்றின் குறுக்கே பெரிய பாலமும், ஆசிரமம் முதல் வழுக்கம்பாறை வரை 20 சிறிய பாலங்களும் கட்டப்பட வேண்டும்.
இதுகுறித்த திட்ட அறிக்கையை நெடுஞ்சாலைத் துறையினர் தயாரித்து அரசுக்கு அனுப்பினர். இந்த அறிக்கையின் அடிப்படையில் திருநெல்வேலி நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர்கள் பெத்தேல் ராஜ் (திட்டம்), செல்வி (ஆய்வு) ஆகியோர் அலுவலர்களுடன் சென்று திட்டப் பகுதியை ஆய்வு செய்தனர்.