நாகர்கோவில் பள்ளியில் கருத்தரங்கம்

நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் உலக போதை எதிர்ப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி போதையில் இருந்து மீண்டு நலம்பெற்ற குடும்பங்களின் சங்கம விழா மற்றும் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் உலக போதை எதிர்ப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி போதையில் இருந்து மீண்டு நலம்பெற்ற குடும்பங்களின் சங்கம விழா மற்றும் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

கோட்டாறு மறைமாவட்ட போதை நலப்பணி சார்பில் நடைபெற்ற விழாவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

எல்லா கலாசார நிகழ்வுகளிலும் மது பயன்படுத்தப்படுகிறது. உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளை மது ஏற்படுத்துகிறது. மது போதைக்கு அடிமையானால் அவர்களது குடும்பமே பாதிக்கப்படுகிறது. மதுவுக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து விடுபடுவது என்பது மிகப் பெரிய நிகழ்வாகும் என்றார். கோட்டாறு மறைமாவட்ட குருகுல முதல்வர் சாலமன், போதை நோய் நலப்பணி திருப்புமுனை இயக்குநர் நெல்சன், புதுவசந்தம் இயக்குநர் மரிய மார்ட்டின், அரசு வழக்குரைஞர் ஞானசேகர், அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரித் தாளாளர் மரிய விக்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் போதையில்லா பாதையிலே என்ற விழிப்புணர்வு சி.டி.யை ஆட்சியர் வெளியிட்டார். நாஞ்சில் நாதம் குழுவினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக குளச்சல், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் இருந்து போதை நோய் விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் தொடங்கி கார்மல் பள்ளியில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com