கன்னியாகுமரி, செப். 23: கொட்டாரம் என்.என்.சி.ஆர். மண்டபத்தில் இலவச பதஞ்சலி யோகா பயிற்சி வியாழக்கிழமை (செப். 25) தொடங்கி, அக். 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நாள்தோறும் மாலை 6.30 மணி முதல், 7.30 மணி வரை நடைபெறும் பயிற்சியில் 5 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்கள் பங்கேற்கலாம்.
நாகர்கோவில் பதஞ்சலி யோகா சமிதி மற்றும் பரத் ஸ்வாபிமான் அறக்கட்டளையில் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.