குமரி மாவட்டத்தைச் சேர்ந்த, சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவியர் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 30.9.2014 வரை காலவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், தகுதி வாய்ந்த சிறுபான்மையின் மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜ்ஜ்ஜ்.ம்ர்ய்ஹள்ஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.