கருங்கல், செப். 23: பள்ளியாடி,செங்கவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் புதன்கிழமை (செப். 24) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், முன்சிறை மற்றும் வியனூர் துணை மின் நிலையங்களின் கருங்கல், வெங்கஞ்சி, நம்பாளி, பிலாவிளை பகுதி உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சரல், மருதூர்குறிச்சி, பள்ளியாடி, வாழ்வச்சகோஷ்டம், தும்பியான்தோட்டம், முருங்கவிளை, கருமாவிளை, வெள்ளியாவிளை, தக்காளிவிளை, காட்டுக்கடை, மாதாபுரம், வேங்கோடு, விழுந்தயம்பலம், அரசகுளம், விளாத்துறை, கூட்டப்புளி, குழிவிளை, மெதுகும்மல், செங்கவிளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனவும், மின் பாதைக்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.