Enable Javscript for better performance
இவர்கள் சொல்கிறார்கள்- Dinamani

சுடச்சுட

    

    பொன். ராதாகிருஷ்ணன் (பாஜக வேட்பாளர்)

    குமரி மாவட்ட ரயில் நிலையங்களில் வளர்ச்சிப் பணிகள் தடைபட்டுள்ளன. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி விரைவு ரயில் முதலாவது நடைமேடையில் இருந்து மூன்றாவது நடைமேடைக்கு மாற்றப்பட்டது. ஆனால் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் அனந்தபுரி ரயில் முதலாவது நடைமேடைக்கு மாற்றப்பட்டது.

    இவ்வாறு குமரி மாவட்டம் ரயில்வே துறையில் திருவனந்தபுரம் கோட்டத்தால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதை மதுரைக் கோட்டத்தில் இணைத்தால் நமது உரிமைகளைக் கேட்டுப் பெற முடியும். தேர்தலில் வெற்றி பெற்றால், குமரி வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் இணைக்கப் பாடுபடுவேன்.

    டி. ஜான்தங்கம் (அதிமுக வேட்பாளர்)
    இம் மாவட்ட ரயில் நிலையங்களை திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் மாற்றாந்தாய் மனப்போக்குடன் பார்க்கின்றனர். கன்னியாகுமரி மாவட்ட ரயில் வழித்தடங்களை, மதுரைக் கோட்டத்துடன் இணைத்தால்தான் நாம் உரிமைகளைப் பெறமுடியும். எம்.பி.யாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்கான அனைத்து முயற்சியும் மேற்கொள்வேன்.

    எப்.எம். ராஜரத்தினம் (திமுக வேட்பாளர்)
    திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைந்திருப்பதால் இங்கு ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. ரயில்வே பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கப்படுவதில்லை.

    ரயில்வே துறையால் வேலைவாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்கள் இம் மாவட்டத்துக்கு கிடைக்கவில்லை. நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், இப் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.

    சுப. உதயகுமார் (ஆம் ஆத்மி வேட்பாளர்)
    படித்த இளைஞர்கள் அதிகமுள்ள இம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அதிகமில்லை. ரயில்வே துறையைப் பொருத்தவரை இம் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் அடிப்படை ஊழியர்கள் உள்பட உயர் பதவிகளில் உள்ளவர்கள் அனைவரும் கேரளத்தைச் சேர்ந்தோர். கேரளத்தை மையப்படுத்தியே ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, மதுரைக் கோட்டத்துடன் குமரி வழித்தடங்களை இணைப்பது மிகவும் அவசியம். மக்கள் பிரதிநிதியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களவையில் இதுகுறித்து குரல் கொடுப்பேன். செய்யத் தவறினால் போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டேன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai