Enable Javscript for better performance
கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு தையல் கலைஞர்கள் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரிக்க தையல் கலைஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

    நாகர்கோவிலில் இச்சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் பி. இந்திரா தலைமை வகித்தார். செயலர் எம். ஐடாஹெலன், பொருளாளர் ஆர். ஜோசப் மற்றும் நிர்வாகிகள் பச்சைமால், தாசம்மாள், யூஜின்மேரி, காளிபிரசாத், மேரி சகாயம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

    அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கவும், நலவாரியத்தின் மூலம் பெண்களுக்கு குறைந்தபட்ச சலுகைகள் கிடைக்கவும் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பெல்லார்மினை ஆதரிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai