Enable Javscript for better performance
குமரியில் சுட்டெரிக்கும் வெயில் வெள்ளரிப்பிஞ்சு விலை ஏறுமுகம்- Dinamani

சுடச்சுட

    

    குமரியில் சுட்டெரிக்கும் வெயில் வெள்ளரிப்பிஞ்சு விலை ஏறுமுகம்

    Published on : 27th March 2014 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெப்பத்தை தணிக்க வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி ஆகியவற்றை மக்கள் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர். தேவை அதிகரித்துள்ள நிலையில் இவைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    ஏப்ரல் மாதம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிகழாண்டு அதிகரித்துள்ளது. வெயில் காலத்தில் பல்வேறு நோய்களும் தாக்கும் அபாயம் அதிகரிக்கும் என்பதால் முற்பகல் 11 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

    கோடை காலத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வெள்ளரிப் பிஞ்சுகளில் 95 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால் உடல் வெப்ப நிலையையும், நீர்ச்சத்தையும் சீராக பராமரித்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

    இதனால் இவற்றை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். தற்போது இவற்றின் தேவை அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ ரூ. 60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை கிலோ ரூ. 100-ஆக உயர்ந்து காணப்பட்டது.

    விலை உயர்வு குறித்து வெள்ளரி வியாபாரியான எம்.ராபர்ட் கூறும் போது, இந்தியாவை தாயகமாக கொண்ட வெள்ளரி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தோட்டப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. நிகழாண்டு பருவமழை தவறிவிட்ட காரணத்தால் வெள்ளரி விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வெள்ளரி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    தேவை அதிகரித்துள்ள நிலையில் விலையேற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் மேலும் விலை உயரும் வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai