Enable Javscript for better performance
குமாரகோயிலில் திருக்கல்யாண நிறைவு விழா- Dinamani

சுடச்சுட

    

    குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண திருவிழா, திரு ஆறாட்டு நிகழ்ச்சியுடன் புதன்கிழமை நிறைவுற்றது.

    இக் கோயிலில்  திருக்கல்யாணத்திருவிழா கடந்த வியாழக்கிழமை  தொடங்கி புதன்கிழமை வரை தொடர்ந்து  7 நாள்கள் நடைபெற்றது. இதையொட்டி தினமும் சிறப்பு வழிபாடு மற்றும் சமய மாநாடு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    ஒன்றாம் திருவிழாவான கடந்த வியாழக்கிழமை (மார்ச் 20)  திருவிழாக்குழு சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பஸ்மாபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 12.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.  மாலை 6-மணிக்கு  திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ முருகபெருமானுக்கும், ஸ்ரீ வள்ளிநாயகிக்கும் காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை(மார்ச் 21) இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழா நிறைவு நாளான புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு சிறப்பு  தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மயில் மற்றும் கிளி வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் ஆறாட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோயில் தெப்பகுளத்தில் திரு ஆறாட்டு மற்றும் பஞ்சாமிர்தம், சிறப்பு அபிஷேங்கள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 6.45 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.  

     நிகழ்ச்சியில் கோயில் மேலாளர் சிவகுமார், விழாக் கமிட்டித் தலைவர் குமரி,ப.ரமேஷ், மற்றும் நிர்வாகிகள் தங்கப்பன், நடராஜன், தாணுமூர்த்தி, சுனில்குமார் உள்பட  திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai