Enable Javscript for better performance
தேர்தல் விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    தக்கலை பகுதியில் தேர்தல் குறித்த  மாணவர், மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு இரு சக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

    பேரணியை பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து கோட்டாட்சியர் அருண்சத்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் விஜயலட்சுமி பேரணிக்கு தலைமை வகித்தார்.

    ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரி மாணவர், மாணவிகள் பங்கேற்ற இப்பேரணி அழகியமண்டபம், மேக்காமண்டபம், வேர்கிளம்பி, திருவட்டாறு வழியாக ஆற்றூரில் நிறைவடைந்தது.  வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பேரணியில் சென்ற மாணவர்,மாணவிகள் விநியோகித்தனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் ஆகியோர் உடன் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai