Enable Javscript for better performance
நித்திரவிளை அருகே மாதா குருசடி கண்ணாடி உடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    நித்திரவிளை அருகே மாதா குருசடி கண்ணாடியை கல்வீசி உடைத்த மர்ம நபர்களை போலீஸார்  தேடி வருகின்றனர்.

    நித்திரவிளை அருகே ஆதிச்சவிளாகம் பகுதியில் மலங்கரை கத்தோலிக்க திருச்சபை உள்ளது. இதையொட்டி புனித யூதா ததேயுஸ் குருசடி அமைந்துள்ளது. இக் குருசடியின் கீழ் பகுதியில் மாதா சொரூபமும் மேல் பகுதியில் புனித யூதா ததேயுஸ் சொரூபமும் உள்ளது. இதில் தேவதூதர் சொரூபங்களும் உள்ளன.

    இந்த நிலையில் குருசடியில் மரியன்னை சொரூபத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை இரவு கல்வீசி உடைத்துள்ளனர்.

     இதுகுறித்து புதன்கிழமை காலையில் தகவல் பரவியதையடுத்து ஏராளமானோர் அங்கு கூடினர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சிலுவைபுரம் பங்குத் தந்தை ஜாய் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இக் குருசடியையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai