Enable Javscript for better performance
புகைப்படக் கலைஞர்கள் நல சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மார்த்தாண்டத்தில் புகைப்படம் மற்றும் விடியோ கலைஞர்கள் நலச் சங்கக் கூட்டம்  அதன் தலைவர் கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது.

    செயலர் வெற்றிவேந்தன், பொருளர் சஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தேர்தல் கண்காணிப்புக் குழுவில் விடியோ பதிவு செய்யும் பணியில் ஈடுபட்ட விடியோ கிராபர்களை திடீரென நீக்கம் செய்ததற்கு தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்க வேண்டும்.

    சங்க ஆண்டு விழாவை ஏப்.29 ஆம் தேதி நடத்த வேண்டும். புதிய அடையாள அட்டைக்கான புகைப்படங்கள் சங்க அலுவலகத்தில் உறுப்பினர்கள் அளிக்க வேண்டும். ஆண்டுவிழாவையொட்டி நலிந்த கலைஞர்கள் மற்றும் ஏழை,எளியோருக்கு வழக்கம்போல நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து விழாக் குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் செயற்குழு உறுப்பினர்கள் பாபு,சந்தோஷ்,போமி,ஜான் கென்னடி மற்றும் ராதா கிருஷ்ணன்,சதீஸ்,தாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai