Enable Javscript for better performance
புத்தனாறு கால்வாய் சீரமைக்கும் பணி- Dinamani

சுடச்சுட

    

    கடை வரம்பு பகுதி விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று ரூ. 18 லட்சம் செலவில் நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    குமரி மாவட்டத்தின் பிரதான பாசனக் கால்வாயாக நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் விளங்கி வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து கடைவரம்பு பகுதி பாசனத்துக்காக இந்த கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

    இந்த கால்வாயின் பல பகுதிகளிலும் ஆகாயத்தாமரைச் செடிகள் படர்ந்து ஆக்கிரமித்துள்ள நிலையில் அதனை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கும்பப்பூ சாகுபடி முடிவடையும் நிலையில் பேச்சிப்பாறை அணை மூடப்பட்டுள்ளது. இதனால் இக்கால்வாயில் தண்ணீர் இல்லாமல் உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று கால்வாய் சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai