Enable Javscript for better performance
பெல்லார்மின் கோதையாறு பகுதியில் வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஏ.வி. பெல்லார்மின் புதன்கிழமை கோதையாறு பகுதி பழங்குடி மக்கள் மற்றும் ரப்பர் கழகத் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

    பழங்குடி மக்கள் மற்றும் அரசு ரப்பர் கழக குடியிருப்பு பகுதிகளான  கிளவியாறு, முடவன்பொற்றை, குற்றியாறு, மாங்காமலை, கொடுத்துறை, மணலிக்காடு, மயிலாறு, மோதிரமலை, சிற்றாறு காலனி,  வட்டப்பாறை, தலக்குமலை,  கல்லறை வயல், ஒரு நூறாம் வயல், செறுகடத்துக் காணி உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.

    இதில் காணி பழங்குடி மக்கள் தங்கள் பகுதியில் சாலை வசதி, மின்சார வசதி, போக்குவரத்து  வசதி, மருத்துவவசதி,  இல்லையெனவும், பயிர் செய்வதற்கு நிலங்கள் இல்லையெனவும்  தெரிவித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். லீமாரோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஸ்டாலின்தாஸ், பி. நடராஜன், ரெகுகாணி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai