Enable Javscript for better performance
பேச்சிப்பாறை வேளாண் அறிவியல் மையத்தை இடம் மாற்றம் செய்வதை கைவிட கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பேச்சிப்பாறை வேளாண் அறிவியல் மையத்தை இடம் மாற்றம் செய்வதை கைவிட கோரிக்கை

    Published on : 27th March 2014 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையத்தை திருப்பதிசாரத்துக்கு மாற்றும் முடிவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கைவிட வேண்டுமென்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து குமரி மாவட்ட பாசனத்தார் சபைத் தலைவர் வின்ஸ் ஆன்டோ கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் வேளாண் அறிவியல் மையம் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த மையம் மூலம் மலைவாழ் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் அனைத்து வகை பயிர்கள் குறித்த நவீன வேளாண் தொழில்நுட்ப பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வந்தன.

    இந்நிலையில் இந்த மையத்தை திருப்பதிசாரத்துக்கு மாற்றும் நடவடிக்கை ஏற்புடையதல்ல. திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சிக்கு மட்டுமே உகந்த இடமாகும். எனவே, பேச்சிப்பாறையில் வேளாண் அறிவியல் மையம் தொடர்ந்து இயங்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேர்தல் நேரம்: மேலும் இந்த மையத்தை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றம் செய்யும் செயல் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானதாகும். இதைதடுக்க முயன்ற முன்னோடி விவசாயி பி. ஹென்றி மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதுடன், விவசாயியை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai