Enable Javscript for better performance
பளுகல் அருகே சர்ச் மதில் சுவர் இடிப்பு: 11 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    பளுகல் அருகே சர்ச் மதில் சுவர் இடிப்பு: 11 பேர் மீது வழக்கு

    By களியக்காவிளை,  |   Published on : 06th November 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பளுகல் காவல் சரக பகுதியில் பெந்தெகோஸ்தெ சபை மதில் சுவரை இடித்து சேதப்படுத்தியதாக 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    குலசேகரம் அருகேயுள்ள மலவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் வில்சன் மகன் ராப்சன் (40). இவர் பளுகல் அருகே தேவிகோடு பகுதியில் ஆதிபெந்தேகொஸ்தெ சபையை நிறுவி, அதில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் செறுவல்லூர் பகுதியைச் சேர்ந்த ர. ஜாண்லிவிங்ஸ்டன் (55), ஆடோட்டுகோணம் ச. டைட்டஸ் (55), பொ. சுந்தரதாஸ் என்ற பிரான்சீஸ் (45), தோலடி ரா. ராபின்சன் (46), ராமவர்மன்சிறை நே. ஷாஜி (40), காரக்கோணம் பா. அருண்குமார் (24), மேல்பாலை இ. சந்தோஷ் (23), தோலடி சோ. ஜோஸ் (35), ஜேசிபி எந்திர உரிமையாளர் கண்ணுமாமூடு தே. அனிஷ் (23), ஆடோட்டுகோணம் தங்கராஜ், டெ. ஷைஜு (23) உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மாலையில் ஜேசிபி எந்திரத்துடன் பெந்தெகோஸ்தெ சபைக்கு சென்று, அங்கிருந்த மதில் சுவரை இடித்து சேதப்படுத்தினராம்.

    இது குறித்து தட்டிக்கேட்ட சபை ஊழியர்களை மிரட்டினராம். இது குறித்து போதகர் ராப்சன் அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai